பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மே 8ல் சிபிஐஎம் போராட்டம் அறிவிப்பு

நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பபெற கோரி வலியுறுத்தி வரும் மே 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து அறிவித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, விலை உயர்வை திரும்பப்பெறும்படி மத்திய அரசுக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் வரும் மே மாதம் 8ம் தேதி போராட்ட நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகைக்கு வரி விலக்கு அளிக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. இதில், பிற ஜனநாயக மற்றும் மக்கள் ஆதரவு அமைப்புகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>