விஷாலை இறக்கி விட்டு ஆழம் பார்க்கும் கமல்!
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஷாலின் இந்த முடிவுக்கு பின்னால் கமல் இருப்பதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், மற்றும் டிடிவி தினகரன் அணியின் சார்பில் அவரே போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்த விஷாலின் முடிவை பற்றி பேசிய சில கமல் ரசிகர்கள் ஆர் கே நகரில் விஷாலை இறக்கி ஆழம் பார்க்கிரார் கமல் என்றும் விரைவில் விஷாலுக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறுகின்றனர்.