மருத்துவ மேற்படிப்பு: மாணவர் சேர்க்கை கட் ஆப் 15 % குறைப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்ணில் 15 சதவீதம் குறைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், நீட் தேர்வின் அடிப்படையில், எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., ஆகிய மருத்துவ மேற்படிப்பு, டி.எம்., எம்.சி.எச்., ஆகிய உயர் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.இந்நிலையில், இதற்கான மாணவர் சேர்க்கையில் கட் ஆப் மதிப்பெண்களை 15 சதவீதம் குறைத்து மத்திய அரசு சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நாட்டா கூறுகையில்,”மருத்துவ துறையை வலுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தகுந்த ஒரு நடவடிக்கை ஆகும். சுகாதார துறைக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் போதுமான மனித சக்தி இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>