`ஓவியா பிறந்தநாளை இப்படி கொண்டாடலாமா?- பாசமழை பொழியும் காயத்ரி ரகுராம்
பிக் பாஸ் புகழ் ஓவியாவின் பிறந்தநாளைக் கொண்டாட புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார் அவரின் `உற்றத் தோழி’ காயத்ரி ரகுராம்.
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் முதல் சீசனில் பல்வேறு திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர். அதில் இறுதி வரை சென்று பட்டமே வெல்லவில்லை என்றாலும் இருவர் உலக புகழடைந்தனர். ஒருவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.
இன்னொருவர் நடிகை ஓவியா. காயத்ரிக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி என்றால், ஓவியாவுக்கு பாசிட்டிவ் பப்ளிசிட்டி. அந்த ஷோ நடந்துகொண்டிருக்கையில், இருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் நிகழ்ந்து கொண்டே இருந்தன. இதன் விளைவாக ஓவியாவின் ரசிகர்கள் காயத்ரி மீது வெறி கொண்டு மீம்ஸ்களை போட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த ஷோ முடிவடைந்த பல மாதங்கள் கடந்த பின்னரும் ஓவியா ரசிகர்கள் காயத்ரியின் ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று வசைபாடி வருகின்றனர். இந்நிலையில் ஒரு அதிர்ச்சிக் கிளப்பும் ட்வீட்டை பதிவு செய்துள்ளார் காயத்ரி.
அதாவது, `ஓவியாவின் பிறந்தநாள் நாளை (29, ஏப்ரல்) வருகிறது. ஓவியா ரசிகர்களே அவருக்கு சிறப்பான ஏதாவது ஒன்றை செய்யுங்கள். உங்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்தானே. எனவே, அவரின் பிறந்தநாளை கொண்டாடித் தீருங்கள். அவருக்கு வாழ்த்துச் சொல்லும் வீடியோவை நாம் எல்லோரும் செய்வோமா?’ என்றுள்ளார்.
இதற்கு ஓவியா ஆர்மியைச் சேர்ந்தவர்கள் எப்படி பின்னூட்டம் அளிப்பர் என்பது தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னர், `ட்விட்டரில் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவுகள் இடுகின்றனர்.
எனவே சமூக வலைதளங்களுக்கு பை-பை சொல்லிக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டவர் காயத்ரி ரகுராம். ஆனால், தொடர்ச்சியாக அவர் ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com