`காலா இசை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடிக்கும் `காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வந்த `கபாலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் இரஞ்சித், ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதை உறுதிபடுத்தும் பட்சத்தில் நடிகர் தனுஷின் `உண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் ரஜினி- இரஞ்சித் கூட்டணியில் படம் உருவாகப் போகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து மின்னல் வேகத்தில் நடந்த ஷூட்டிங்கால், `காலா’ தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் காரணமாக தள்ளிப் போய்க்கொண்டிருந்தது `காலா’-வின் ரிலீஸ்.

இதையடுத்து, ஏப்ரல் 20-ம் தேதி, `காலா ஜூன் 7-ம் தேதி அனைத்து மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியாகும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று, `மே 9-ம் தேதி காலா திரைப்படத்தின் இசை வெளியிடப்படும்’ என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>