180 கோடிக்கு ஆர்.எஸ்.எஸ். கதை ரெடி இயக்குனர் யார்?

ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒரு பிரமாண்ட திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்றும் அதனை ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் கதை எழுதி திரைக்கதை அமைத்தல் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அணுகினார் பா.ஜ.க ஆதரவாளரும் கன்னட ஆடியோ ஜாம்பவானுமான லஹரி வேலு துளசி நாயுடு.

காரணம் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படங்கள் மிக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனை உற்று கவனித்த துளசி நாயுடு வெற்றிக்கு பின்னால் இருப்பது விஜயேந்திர பிரசாத் என்று அறிந்துகொண்டார். இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ் பற்றிய திரைப்படத்தையும் விஜயேந்திர பிரசாத் எழுதி கொடுத்தால் படம் வெற்றி பெரும் என்று நம்புகிறார்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி கதை எழுதி தர ஒப்புக்கொண்ட விஜயேந்திர பிரசாத் அதற்கான வேலைகளை துடங்கினார். தற்போது அதற்கான கதை மற்றும் திரைக்கதை தயார் நிலையில் உள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் படத்தின் கதை திரைக்கதை எழுத அவர் உதவியதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

பக்வாத்வாஜ் ( அ ) ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தலைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டில் ஒன்று இறுதி செய்யப்படும். விஜயேந்திர பிரசாத் எழுதிய கதை மற்றும் திரைக்கதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு முழு திருப்தி என்றும், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.பற்றிய இத்திரைப்பதை இயக்க போவது யார் என இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால் படத்தை தயாரிக்க ரூ.180 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>