திசையன்விளை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பலி
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து என்பவரின் மகன் வென்னிமாலை (வயது 48). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி (48) என்ற மனைவியும், திருமணமான இரு மகள்களும், குமார் (22) என்ற ஒரு மகனும் உள்ளனர்.வென்னிமாலை நேற்று காலையில் பங்குனி உத்திர திருவிழா என்பதால் கோவி லுக்கு செல்வதற்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் , முதுமொத்தான்மொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோட்டம் ஒன்றில் வாழைக் காய் வெட்டுவதற்காக சென்றுள்ளார். செல்லும் பாதை யில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காமல் சென்ற வென்னிமாலை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ,அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்மு விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றோ பிரதீப் வழக்குப்பதிவு செய்து | விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிளில் சென்றவர் அறுந்துகிடந்த மின்கம்பியில் சிக்கி மின்சா ரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மின்சாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் சத்தியம் தொலைக்காட்சியிடம் கூறுகையிவ்ல, தமிழக மின் துறையில் மின் தொழிலாளர்களின் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால்,மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார கம்பிகளை முறையாக பராமரிக்க முடியாத நிலையுள்ளதாக தெரிவித்துள்ளார்.