இனவெறி நீடித்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் : ஆஸ்கர் நடிகை
By Isaivaani
இன்னொரு நடிகையான செல்ஸியா ஹேண்ட்லரிடம் பேட்டி ஒன்றில், "மக்கள் நினைப்பதை விட இனப்பாகுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. அதை நாம் மறுக்க முடியாது.
அமெரிக்காவில் சில இடங்களில் எனக்கு வேலை கிடைத்தால் ஒப்புக்கொள்ள இயலாது. சில இடங்களுக்கு என் பிள்ளைகளோடு செல்ல முடியாது. இதுபோன்ற நிலை நீடித்தால், பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி அமெரிக்காவை விட்டே வெளியேறுவேன்," என்று நடிகை சார்லைஸ் தேரன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வளர்ந்த சார்லைஸ் தேரன், 2004-ம் ஆண்டில் ஆஸ்கர் விருது வென்றார். 2007-ம் ஆண்டு முதல் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். ஜாக்சன் என்ற ஆறு வயது மகனும், ஆகஸ்ட் என்ற இரண்டு வயது மகளும் சார்லைஸுக்கு இருக்கிறார்கள். கறுப்பின குழந்தைகளான இருவரையும் சார்லைஸ் தேரன், தத்து எடுத்து ஒற்றை பெற்றோராக வளர்த்து வருகிறார்.
சார்லைஸ் தேரன், 'டல்லி' என்ற திரைப்படத்தில், ஒற்றை பெற்றோராக மூன்று குழந்தைகளை வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com