பொன்முடியை கைது செய்ய கோரி பிரமாண்ட ஆர்ப்பாட்டம் : நெல்லையில் பெண்கள் உள்ளிட்ட 293 பேர் கைது 

நெல்லை டவுனில் அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சார்பாக அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உட்பட 293 பேரை கைது செய்தனர். 

இந்துக்கள் புனிதமாக அணியும் விபூதி மற்றும்  பட்டை திருநாமத்தை இழிவுபடுத்தி அருவெறுக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலகச் சொல்லி நெல்லை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார்  தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் . அரசு ராஜா , மாநில இணை அமைப்பாளர் பொன்னையா , மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் , மாயகூத்தன ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் கிருஷ்ண பிரியா முத்துலட்சுமி, ஆனந்தகனி , வெள்ளத்தாய் ஜானகி சாந்தி கண்ணகிகோட்டத் தலைவர் தங்க மனோகர்  கோட்டச் செயலாளர்கள் ஆறுமுகசாமி, கண்ணன், பிரம்மநாயகம், நெல்லை மாவட்ட நிர்வாகிகள்  சுடலை, சங்கர், விமல் ,  இராம.செல்வராஜ் , போஸ், செந்தில் ராஜசெல்வம், துரைராஜ்,  வழக்கறிஞர்கள் வெற்றிவேல்,  ராமசுப்பு,  சுபாஷ் , மணிகண்டமகாதேவன், நெல்லை புறநகர் மாவட்ட நிர்வாகிகள்  நாகராஜன் கார்த்தி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள்  மணிகண்டன் பால்ராஜ் குளத்தூரான் ஆறுமுகம் சிவா  கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள்  கிருஷ்ணகுமார் ராஜேஸ்வரன் , ராஜா தூத்துக்குடிக்கு மாவட்ட  நிர்வாகிகள்  இசக்கி , சரவணகுமார் , நாராயணராஜ், முத்துக்குமார் ,  ராமர், முருகன் , ஆனந்த், ரவிச்சந்திரன், செந்தில் , வெங்கடேஷ் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் பிரபு , சஞ்சீவி , வினோத் , வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி பந்தல் ராஜா, சைவ வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் மாரியப்பன் குருஉலகநாதன்,  செந்தில்  ஆறுமுகம் குற்றாலிங்கம்,  செந்தில்வீரபாகு சொக்கலிங்கம் உட்பட 480-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற   68 பெண்கள் உட்பட 293பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

More News >>