விஷாலுக்கு ஆதரவாக அரவித் கெஜ்ரிவால் பிரச்சாரம்?

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.      அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சசிகலா அணி சார்பில் தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.   இன்றைய  விஷாலின் அரசியல் பிரவேசம் பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஆம் ஆதமி கட்சி அரவித் கெஜ்ரிவால் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தார் மேலும் டெல்லி வரும்போது என்னை சந்திக்க வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.   இதற்கு நன்றி தெரிவித்து விஷாலும் ரீடுவிட் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை பிரச்சாரத்திற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
More News >>