`தோனி ஏன் கெத்து தெரியுமா?- விளக்கும் இர்ஃபான் பதான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து வித்தியாசமான ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான்.
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த காலத்தில் கோலோச்சியவர் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான்.
இந்நிலையில் தோனியின் சிறப்பு குணம் பற்றி அவர் பேசியுள்ளார். பதான், எம்.எஸ்.டி குறித்து பேசும்போது, `தோனியிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூற முடியும். இந்திய அணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள்தான் ஆகிறது என்றால் கூட, அவரிடம் சுதந்திரமாக பேச முடியும்.
ஒருவரிடம் பேசும்போது அவருக்கு உண்டான மரியாதையையும் கவனத்தையும் தோனி கொடுத்தே தீருவார். ஜூனியராக இருக்கும் ஒரே காரணத்திற்காக, அவர் யாரையும் அவமதிக்கவோ குறைத்து மதிப்பிடவோ மாட்டார்.
அது தான் தோனியை மிகவும் சிறந்த கேப்டனாகவும் மனிதனாகவும் ஆக்குகிறது’ என்று கேப்டன் கூல் தோனி பற்றி நெகிழ்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com