`நேரம் குறிச்சாச்சு..!- அமைதி நோக்கி வடகொரியா
அமெரிக்கா வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு நேரம் குறிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு வழியாக கொரிய திபகற்பத்தில் நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று, `இனி அணு ஆயுதச் சோதனை எங்கள் நாட்டில் கிடையாது’ என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் முன்னிலையில் அறிவித்தார்.
இதையடுத்து இரு நாட்டு அதிபர்களும் கூட்டாக, `அமைதி நோக்கி கொரியா திரும்பிவிட்டது’ என்று தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், `வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேதி மற்றும் நேரம் குறிக்கப்பட்டுவிட்டது’ என்று அறிவித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து அவர் விரிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், `தென்கொரிய ஆதிபர் மூன் இடம் மிக நீண்ட நேரம் உரையாடினேன். எல்லா விஷயங்களும் சரியாகவே சென்று கொண்டிருக்கின்றன.
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இடம் மற்றும் நேரம் குறிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஜப்பான் பிரதமர் அபேவின் இடமும், நடந்த விஷயங்கள் பற்றி தெரிவித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com