தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத நடிகை, 1960 முதல் 1970 வரை ஆதிக்கம் செலுத்தியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி என இரு பெரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். நடிகையர் திலகம் என பெயர் பெற்றவர் நடிகை சாவித்ரி.
இது மட்டுமில்லாமல் பாடகி, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் பல அவதாரம் எடுத்தார். தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான இவரின் முதல் தமிழ் திரைப்படம் மாயா பஜார். ராஷ்ட்ரபதி மற்றும் நந்தி விருதுகள் இவரின் கிரீடத்தை அலங்கரித்தது.
தற்போது சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் படமாகி வெளியாக தயார் நிலையில் உள்ளது.
அதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். துல்கர் சல்மான் ஜெமினிகணேசன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சமந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நாக் அஸ்வின் டைரக்டு செய்து இருக்கிறார். இப்படம் மே 9ந் தேதி வெளியாக இருக்கிறது.
நடிகை கீர்த்தியிடம் சமீபகாலமாக சிறுமி பாலியல் வன்கொடுமை, நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்பு என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி முன் வைக்கபட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி, ‘பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இன்னொரு முறை அவர்கள் குற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com