இப்படி ஒரு முதல்வரை நான் பார்த்ததே இல்லை - விஜய் சேதுபதி!
கேரள முதல்வர் பினராயி விஜயன் சாதியவாதத்துக்கு எதிராக பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளா விஷன் என்கிற சாட்டிலைட் டி.வி துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முதலில் சாதிய விஷயங்கள் சமூகத்தை விட்டுப் போகாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கேரளாவில் அது நடந்துவிட்டது. இது இந்தியா முழுதும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அவர் இங்கு வரும்பொழுது பார்த்தேன். பினராயி விஜயனைப் போல எளிமையான மனிதனை நான் பார்த்தில்லை. அவரை போன்ற செயலூக்கமுள்ள மற்றொரு முதல்வரையும் பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com