ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசித்தனர்.
மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் தொடக்கம் முதல் மிக பிரசிதியாக நடைபெறும். குறிப்பாக, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவை மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா.
இந்த விழாவை காண தமிழகம் மட்டுமல்லால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் கூட சித்திரை திருவிழாவை காண வருவர். கடந்த 18ம் தேதி தொடங்கிய இத்திருவிழா இன்றுடன் 12 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கள்ளழகர் நேற்று இரவு முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த கள்ளழகர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கி புறப்பட்டார். தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு பச்சை பட்டு உடுத்தி அதுகாலை 3 மணிக்கு கள்ளழகர் புறப்பட்டார்.
தங்க குதிரை வாகனத்தை சுமந்து வந்த சீர்பாத தூக்கிகள் உள்ளங்கைகளில் தாங்கி தூக்கிப்பிடித்தபடி இருபுறமும் அசைத்தனர். இதனை பார்ப்பவர்களுக்கு அழகர் குதிரையில் துள்ளி வருவது போன்ற பரவசமான நிலை ஏற்பட்டது.
சரியாக காலை 5.55 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர், வீரராகவ பெருமாளை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் 3 முறை சுற்றி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்ப்டட பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை நகர் பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்னர். பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com