தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் அதிரடி கைது 

தூத்துக்குடியில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவர்  மது விலக்கு போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்  ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  குருவெங்கட்ராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா தலைமையில் சார்பு ஆய்வாளர்  லூர்து சேவியர் மற்றும் போலீசார் நேற்று (மே 10 ) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,   சின்னகண்ணுபுரம் பகுதியில்  இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மடத்தூர் துரைக்கனி நகரை சேர்ந்த  ரவிக்குமார் (52) என்பவரை கைது செய்தனர்.பின்னர், அவரிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் 1,200 ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News >>