எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் : கடையநல்லூரில் ரத்ததான முகாம்

கடையநல்லூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து கடையநல்லூர் தனியார் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. முகாமை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, அவைத் தலைவர் வி பி மூர்த்தி, இணைச் செயலாளர் சண்முகப்பிரியா துணை செயலாளர் பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வைத்தனர் மாவட்டத் துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்புரையாற்றினார்.

தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர் பாபு தலைமையிலான மருத்துவகுழுவினர் கொடையாளர்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றுக் கொண்டனர்

இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் துணைச் செயலாளர் கந்தசாமி பாண்டியன் , மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவா ஆனந்த்,அண்ணா தொழிற்சங்க பேரவை மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதன் , மாவட்ட மருத்துவ அணி திலீபன் ஆகியோர் செய்திருந்தனர்.

முகாமில் அதிமுகவைச் சேர்ந்த எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் கிட்டுராஜா கடையநல்லூர் நகரச் செயலாளர் எம் கே முருகன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ,அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் சுசீகரன் , மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன் , மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் இடைகால் செல்லப்பா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சத்தியகலா தீபக், சவுதி அரேபிய அம்மா பேரவை செயலாளர் எஸ் எம் மைதீன், கருப்பையா தாஸ், ராஜேந்திர பிரசாத், தளவாய்சுந்தரம் , ஜெயமாலன், பேச்சாளர் தீ கனல் லட்சுமணன் , வர்த்தக அணி மாவட்டத் துணைத் தலைவர் தளவாய் சுந்தரம், உட்பட கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் தொகுதியைச் சேர்ந்த 176 அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

More News >>