கொளுத்தும் கோடை வெயில்:  திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் வறண்டன 

ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் கோடை வெயில் காரணமாக  திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகள் வறண்டு காணப்படுகின்றன. 

நடப்பாண்டில் இந்த மாவ்ட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில்  மழை பெய்தது. எனினும், அணைப்பகுதிகளில் மழை இல்லை.  நீர் வரத்தும் இல்லை. இதனால் அணைகளின்  நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  பாபநாசம் அணையின் மொத்த நீர் மட்டம் 143 அடியாகும். நேற்று  83 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 83 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணையில் 85 அடி நீர்மட்டமே உள்ளது.  50 அடி உயரமுள்ள வடக்கு பச்சையாறு அணையின் நீர் மட்டம் 10 அடியே உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படவும் இல்லை.  22 அடி உயரம் உள்ள நம்பியாறு அணையில் 13 அடி நீர் மட்டுமே உள்ளது. 52 அடி உயரமுள்ள கொடுமுடியாறு அணையில் 14 அடி மட்டுமே நீர்மட்டம் உள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா நதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 10 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது.

More News >>