ஜி.பி. முத்து வீட்டை முற்றுகையிட்ட மக்கள் உடன்குடியில் என்ன நடக்கிறது? 

யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.  இதனைத்தொடர்ந்து சில படங்களிலும் நடித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜிபி முத்து, அங்குள்ள சிலரின் ஆக்கிரமிப்பால் கீழ்த்தெரு என்கிற பகுதியே காணாமல் போனதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். 

மனுவில், , "பெருமாள்புரத்தில் கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது. மேலும் ஒரு இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது . அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது." என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இன்று( மே 14) கிராம மக்கள் ஜி.பி. முத்துவின் வீட்டை முற்றுகையிட வந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் ஜி.பி. முத்து ஒழிக என்று கோஷமிட்டனர்.  அபோது, ஜி.பி முத்துவும் தனக்குதானே ஜி.பி. முத்து ஒழிக என்று கோஷமிட்டார்.

More News >>