திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையத்தில் டமால் ... அரசு பேருந்துகளால் பீதியில் பயணிகள்
நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்தில் பிரேக் பிடிக்காததால் மற்றொரு பேருந்தில் பின்புறம் மோதியதில் 12 பேர் காயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து இன்று( மே 14)காலை வந்து கொண்டிருந்தது .இந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த பேருந்து திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இறங்கி நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது , திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம் சென்னல்பட்டி இருந்து திருநெல்வேலியை நோக்கி வந்த நகர பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 25 பேர் வரை இருந்தனர். இந்த பேருந்தில் பின்புறம் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியது . இந்த விபத்தில், பின்புற கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது. புளியங்குடியில் இருந்து வந்த அரசு பேருந்து முன் பகுதியும் சேதமடைந்தது . இதில், 12 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் . அரசு பேருந்துகளில் முறையாக பராமரிக்கப்படாததே, விபத்துக்கு காரணம் என கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்