திருநெல்வேலி : பாராக மாறிய டவுன் நயினார் குளம் சாலை மதுவம்பர்களால் பெண்கள் அச்சம் 

திருநெல்வேலி டவுன் நயினார்குளம் சாலை, எப்போதும் பரபரப்பாக காணப்படும் . இங்கு ஒரு  டாஸ்மாக் கடை  உள்ளது. இதனால், குடிமகன்கள்  பகல், இரவு என பார்க்காமல் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பொது வெளியில் மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்துப்போட்டுச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. அந்த பகுதியில் செல்லும் பெண்களிடத்திலும் மது போதையில் வம்பு செய்கின்றனர்.

இதனால், இந்த சாலையில் பெண்கள் நடமாடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவது அதிகரித்துவிட்டது என்றும் காவல்துறையினர் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுத்து மதுவம்பர்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.  திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுவெளியில்  மது அருந்தும் பழக்கம் பெருகி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

More News >>