திருநெல்வேலி : ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வை  196 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி ஜெயஸ்ரீ 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவிகள் பவித்ரா, பூமிகா, மாணவர் சித்திக் மணி ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் அனுஸ்ரீ, இந்திரா பிரியதர்ஷினி, மாணவர் ஸ்ரீஹரி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும் சாய் மதுஸ்ரீ, சிவதர்ஷினி, சுர்ஜீத் மாரி முகேஷ், ராகேஷ் ஆகியோர் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், ஆயிஷா படிலா, பிருந்தா, நந்தனா ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று 5-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 19 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும் பாடவாரியாக 46 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 14 பேரும், அறிவியல் பாடத்தில் 15 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 17 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை ஜெயேந்திரா பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

More News >>