நாற்றம் அடித்த முதலாளி... வழக்கு போட்ட தொழிலாளி

முதலாளி வெளியிடும் அதிகமாக கார்பன் டை ஆன்ஸைடால் தான் பாதிக்கப்பட்டிருப்பாக கூறி, 1.8 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு ஆஸ்திரேலியாவில் தொழிலாளி டேவில் ஹின்ஸ்க்ட் என்பவர் விநோதமான ஒரு வழக்கை தொடர்ந்தார்.

டேவில் ஹின்ஸ்க்ட் தொடர்ந்த வழக்கில், எனது முதலாளி ஒவ்வொரு நாளும் அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறார். இதன் முலம் எனக்கு பதற்றம், மன அழுத்தம், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். முதலாளியின் நாற்றம் தாங்க முடியாமல் பலமுறை ஸ்பிரே அடித்திருகிறேன்.

இதனால் எனது பணியை இழந்துள்ளேன். 2017 ஆம் ஆண்டு இந்த பிரச்சினைக்கு ஆளாகி இருக்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணை 18 நாட்கள் நடைப்பெற்றது. இந்நிலையில் வாயு வெளியேற்றுவதை எல்லாம் கொடுமை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி இந்த வழக்கை தள்ளுப்படி செய்துவுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>