நிர்மலா தேவி விவகாரம்... சந்தானம் குழுவுக்கு 2 வாரகால அவகாசம்
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தமிழக மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, மதுரை பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி, தங்கபாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தை விசாசிக்க ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் நியமித்தார்.
நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியுள்ளது. இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் குழு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரகால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com