20 ஆண்டுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... நெல்லை ரஹ்மானியா பள்ளியில் நடந்த ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு
நெல்லை ரஹ்மானியா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 20 ஆண்டிற்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ரஹ்மானியா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 20 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு மேலப்பாளையம் எஸ்.கே. மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஆசிரியர்களான சுப்பிரமணியன், ருக்மணி, பிரபாவதி, மல்லிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியை ஹென்ஷி ஜோசுவா தொகுத்து வழங்கினார். சுகுமாறன், சண்முக பாண்டி, தங்க முத்து, ராம்கி, முத்துராஜ், பிரசாந்த் மற்றும் நண்பர்கள் அனைவரும் விழா சிறப்பிக்க முக்கிய பங்காற்றினார்கள். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மலரும் நினைவுகளோடு விருந்து உபசரணை செய்து விழா நிறைவு பெற்றது.