கன்னியாகுமரி: மருத்துவர்கள் அலட்சியம்... இறந்தே பிறந்த குழந்தை... ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அவலம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்தே பிறந்துள்ளதாக தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவர் பிரசவத்திற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது. அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் போதிய படுக்க வசதி இல்லை, எனவே இரண்டு நாட்கள் கழித்து வருமாறு திருப்பி அனுப்பி உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாள் கழித்து பிரசவ சிகிச்சைக்காக வந் ராதிகாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் , குழந்தை இறந்தே பிறந்ததாக ராதிகாவின் கணவர் சுரேஷிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சடைந்த ராதிகாவின் கணவர், என் மனைவிக்கு காலம் தாழ்த்தி சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் உரிய நேரத்தில் முறைப்படி சிகிச்சை அளித்திருந்தால் என் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என ராதிகாவின் கணவர், உறவினர்கள் கூறினர். இவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளும் இணைந்து மருத்துவமனைக்கு முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.