கன்னங்குளம்: படித்த பள்ளிக்கு 40 லட்சத்தில் கட்டடம் கட்டி கொடுத்த தொழிலதிபர்

கன்னங்குளத்தில் தான் படித்த பள்ளிக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்புதிய கட்டடத்தை முன்னாள் மாணவர் ஒருவர் கட்டிக் கொடுத்துள்ளார்

நெல்லை மாவட்டம் கன்னன்குளம் எல் எம் நடுநிலை பள்ளியில் பயின்றவர் ஜான்சன் தங்கவேல். தற்போது தொழிலதிபராக உள்ளார். இவர், கன்னன்குளம் நடுநிலை பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 40 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். அதன் பேரில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா சிஎஸ்ஐ ஆயர் பிரின்ஸ்லி சாம் ஏசுதாஸ் தலைமையில் இன்று (மே 23) நடைபெற்றது. நிகழ்ச்சியை எட்மின் ஜெனிட்டா , விமலா பிரிட்டோ, சினேகா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆயர் எட்வர்ட் சவுந்தர் ராபின்சன் , சபாநாயகர் அப்பாவு, வெலிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவர் கட்டி தங்கம்மணி வர்ண பெருமாள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஜான்சன் தங்கவேல் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் போது, கன்னங்குளத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

More News >>