மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை: புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிப்பு
மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான புதிய கட் ஆப் மதிப்பெண் குறித்த விவரத்தை மருத்துவ கல்வி செயலாளர் அறிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு இன்று முதல் வரும் 3ம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான புதிய கட் ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பொதுப்பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 262ல் இருந்து 320 வரையிலும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் 225 மதிப்பெண்ணும், மாற்றுத் திறனாளிகள் 244 மதிப்பெண்ணும் எடுத்திருந்தால் போதும் என மருத்துவ கல்வி செயலாளர் கூறியுள்ளார்.இதேபோல், எம்.டி.எஸ் படிப்பிற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணும் குறைக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுப்பிரிவு 149 மதிப்பெண், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு115 மதிப்பெண், மாற்றுத்திறனாளிகள் 133 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். இந்த மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், நீட் தேர்வில் எடுக்க வேண்டி குறைந்தபட்ச மதிப்பெண் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com