கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு

கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய விழிப்புணர்வுல ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் விபத்தே இல்லா கன்னியாகுமரி என்ற பெயரில் வழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி நடத்த உத்தரவிட்டிருந்தார். இது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுது. சுமார் 40 ரீல்ஸ் இளைஞர்கள் போட்டிக்காக அனுப்பியிருந்தார். அவற்றில் இருந்து சிறந்த மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் பரிசை மார்த்தாண்டம் எழில் குழுவினர் தட்டி சென்றனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை நாகர்கோவில் அஸ்மி பாத்திமா குழுவினரும் களியங்காடு ஜனா குழுவினரும் பெற்றனர். முதல் பரிசு பெற்றவர்களுக்க சான்றிதழுடன் 10 ஆயிரம் ரொக்கப்பரிசை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார். இரண்டாவது பரிசாக 7 ஆயிரமும் மூன்றாவது பரிசாக 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , இந்த ரீல்ஸ் போட்டிய அனைத்து படைப்புகளும் மிகச் சிறந்தவைகளாக இருந்தன .அவற்றிலிருந்து முதல் மூன்று பரிசுக்குரிய படைப்புகளை தேர்ந்தெடுக்க மிகச்சிரமமாக இருந்தது . பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து அனைவரும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

More News >>