சித்தராமையாவுக்கு புத்தி கெட்டுவிட்டது : எடியூரப்பா கடும் தாக்கு
சித்தராமையாவுக்கு புத்தி கெட்டுவிட்டது, அதனால் தான் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று பாஜ தலைவரும், முதலவர் வேட்பாளருமான எடியூரப்பா கடுமையாக தாக்கி உள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அந்தந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேட்பாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கல்புர்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜ தலைவரும், முதல்வருமான எடியூரப்ப காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சித்தராமையாவை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், “சித்தராமையாவுக்கு புத்தி கெட்டுவிட்டது. அதனால் தான் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். தனக்கு மராட்டிய மொழி பேச வராது என்றும் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் சித்தராமையா பேசியிருப்பது வேதனை. கன்னட மண்ணில் இருந்து கொண்டு சித்தராமையா கன்னடர்களை அவமதித்துவிட்டார். உடனே மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜ வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. சித்தராமையா 2 தொகுதியிலும் தோல்வியடைவது உறுதி” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com