திருநெல்வேலி : திடீரென முளைத்த பேனர்கள்... முளையிலேயே கிள்ளி எறிந்த போலீஸ்
திருநெல்வேலியில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடையை மீறி, எஸ் டி சி கல்லூரி எதிரே உள்ள சாலை திருப்பத்தில் சட்ட விரோதமாக விளம்பர பதாகைகள் திடீரென முளைத்தன. இதனால், வாக ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் விளம்பர பதாகைகள் குறித்து திருநெல்வேலி மாநகர கிழக்கு பகுதி காவல்துறை துணை ஆணையாளர் வினோத் சாந்தாராமுக்கு தகவல் தெரிவித்தனர். துணை ஆணையாளரின் உத்தரவையடுத்து, உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேனர்களை அகற்றினர். பேனர்களை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை வைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மீண்டும் பேனர்கள் திடீரென முளைக்காமல் இருக்கும் என்று மக்கள் கூறுகின்றனர்.