நெல்லை தச்சநல்லூரில் சோகம் மகனுடன் பைக்கில் சென்ற தாய் நிலைதடுமாறி கீழே விழுந்து பலி

தச்சநல்லூரில் மகனுடன் பைக்கில் சென்ற தாய் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை அருகே உள்ள தச்சநல்லூர் நம்பிராஜபுரத்தைச் சேர்ந்த ராமையாவின் மனைவி சாந்தி (50). இன்று மதியம் அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மகன் பாலமுருகனுடன்(28) பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருமண மண்டபம் அருகே சென்றபோது, சாலையிலிருந்த வேகத்தடையை கவனிக்காமல் பாலமுருகன் வேகமாக வண்டி ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில், பின்னால் அமர்ந்திருந்த சாந்தி நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News >>