தாமிரபரணி ஆற்று தண்ணீரை சுத்திகரிக்காமல் விநியோகிக்கும் அவலம்... யாரை நொந்து கொள்வது?

தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கSக்கு பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களின் (CWSSs) கீழ் சுத்திகரிக்கப்படாத, தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) தாமிரபரணி ஆற்றங்கரையில் தோண்டப்பட்ட உறை கிணறுகளில் நீரை எடுப்பதற்கு பதிலாக நேரடியாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை எடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் முக்கூடல் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, வாசுதேவநல்லூர் (தென்காசி) கூட்டுக் குடிநீர் திட்டம் CWSS மற்றும் ராஜபாளையம் (விருதுநகர்) கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு CWSS க்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் ஒரு பகுதி நேரடியாக ஆற்றில் இருந்து எடுக்கப்படுவது தெரியவந்தது. முக்கூடல் பாலத்திற்கு அருகில் ஆற்றில் மூழ்கிய நிலையில் குடிநீர் வாரியத்தின் 6 மோட்டார்கள் இருந்தன. இந்த பகுதி உள்ளூர்வாசிகள் துணிகளை துவைப்பதற்கும், குளிப்பதற்கும், திறந்தவெளிக் கழிப்பிடத்திற்குப் , வீட்டுக் கழிவுகளை கொட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் தண்ணீர் சுமார் 100 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்படாமலேயே வழங்கப்படுகிறது. மேலும், முக்கூடல் பகுதியில் உள்ள பல உறை கிணறுகள் சேதமடைந்துள்ளன. முத்தாரம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு உறை கிணறு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தி குளிக்கும் இடத்தில் இருந்து நேரடியாக தண்ணீரை பெறுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த 8 பேர் தாமிரபரணி தண்ணீரைக் குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளுக்கு குடிக்க முடியாத அளவுக்கு மாசுபட்ட நீர் விநியோகிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய செயற் பொறியாளர் ஆதி நாராயணனிடம் கேட்ட போது, ராஜபாளையம் மற்றும் வாசுதேவநல்லூர் CWSS கூட்டு குடிநீர் திட்ட பயனுக்காக விநியோகிக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய விதிமுறைகளை மீறி நேரடியாக ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில்"இது தற்காலிகமானது, நிரந்தரமல்ல. ஆற்று நீரில் உள்ள கழிவுகள் குழாய்கள் வழியாக பயணிக்கும்போது வடிகட்டப்படுகின்றன. உதாரணமாக, வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் CWSS கீழ் உள்ள கிராமங்களை சென்றடைவதற்கு முன்பு நீர் சுமார் 40 கி.மீ. பயணிக்கிறது. மேலும், விநியோகத்திற்கு முன் குளோரினேஷன் செய்யப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தாமிரபரணி தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கும் போது சுத்திகரிக்கப்படாமல் அனுப்புவது எந்த விதத்தில் நியாயம் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More News >>