கல்பனா சாவ்லா, அமெரிக்காவின் நாயகி- புகழும் அதிபர் ட்ரம்ப்!
’விண்வெளி ஆராய்ச்சிக்காக டன் இன்னுயிரையும் தியாகம் செய்தவர் மறைந்த விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லா’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நடந்த ஒரு விழாவில் மே மாதத்தை ‘ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவின் பாரம்பரிய மாதம்’ ஆக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை அமெரிக்க காங்கிரஸ் சபையும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
இவ்விழாவில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியரான கல்பனா சாவ்லா குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். விண்வெளி ஆராய்ச்சி வீராங்கனையான கல்பனா சாவ்லா, கடந்த 2003-ம் ஆண்டு விண்வெளி பயணத்தின் நிறைவு தருணத்தில் விண்கலம் வெடித்து பலியானார்.
அவரை கவுரவப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் உயரிய மரியாதைக்குரிய விருது அளித்து கவுரவித்தது. அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவும் அவருக்கு நாசாவின் மிகச்சிறந்த விருது அளித்து சிறப்பித்தது.
இந்நிலையில், நேற்றைய விழாவில் அதிபர் ட்ரம்ப், மறைந்த கல்பனா சாவ்லாவை ‘அமெரிக்காவின் நாயகி’ என்று பெருமிதத்துடன் அறிவித்தார். மேலும், “இந்திய அமெரிக்கரான கல்பனா சாவ்லாதான் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் ஆவார்.
அவரது ஆர்வமும் கடின உழைப்பும் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான குறிக்கோளும்தான் இன்று அவர் விண்வெளி ஆராய்ச்சியாளராக நினைக்கும் பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்” எனக் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com