தமிழ்நாடு தீயணைப்புத்துறையினருக்கு 8 மணி நேரம் பணி வழங்கப்படுமா?
தமிழ்நாடு தீயணைப்புத்துறையினர் சார்பில் தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 'தமிழக காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பவர் வரைக்கும் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் வார விடுமுறை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போலவே, தீயணைப்புத்துறையிலும் 8 மணி நேரம் பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களும் மன உளைச்சல், பணி நிமித்தமான பிரச்னைகளுக்கு ஆளாகிறோம். எனவே, 8 மணி நேரம் பணி ஒதுக்கினால், வார விடுமுறை வழங்கப்பபட்டால், எங்களால் அவசரகால பணி சூழலில் இன்னும் சிறப்பாக பணியை நேர்த்தியாக செய்ய முடியும். '
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.