இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்
நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களிலும், அன்பினாலும் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை உழைப்பாளர் தினத்தோடு மற்றொரு விஷேஷ தினம் என்றால் அது ‘தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார் பிறந்தநாள் தான். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெருங்கூட்டத்தையே உருவாக்கியவர் அஜீத்.
தற்போது அஜித் தனது 58வது படமாகும் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மே 1 அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் குஷியாகியுள்ளனர். அஜித்தின் பிறந்தநாளை பல்வேறு விதத்தில் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் #HBDThalaAJITH என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com