பாபநாசம்: நறுமண தாவரங்கள் பற்றி விளக்க பயிற்சி முகாம்
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டன்துறை வன உயிரின காப்பகத்தில் நறுமண தாவரங்கள் பயிடுவது மற்றும் நறுமண தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கு பாபநாசம் காராயாறு அருகேயுள்ள சின்னமைலா பகுதியில் நடந்தது. இதில், ஏராளமாக கானியின மக்கள்பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சின்ன மைலா பகுதியில் பயிரிடப்பட்ட அரிய வகை காய், கனிகள், எண்ணெய் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர் கலைச்செல்வி முண்டன்துறை வனகாப்பக துணை இயக்குநர் இளையராஜா சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள் பிரகதீஷ், சிவகாசி வனஅய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி பேராசிரியர் முருகன், முண்டன்துறை வனச்சரகல் கல்யாணி, காணியின மக்கள் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.