விஷாலை களமிறக்கியது தினகரனா? என்ன சொல்கிறார் மதுசூதனன்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற அவர், மீனவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தேர்தலில் வெற்றிபெற்றால் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மதுசூதனன் உறுதி அளித்தார்.
பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “கந்துவட்டி பாதிப்பில் இருந்து காப்பதாக தினகரன் உறுதி அளித்திருப்பதால் விஷால் தேர்தலில் போட்டியிடுகிறார்” என்று கூறினார்.
“தினகரன் குடும்பத்துக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது” என்று கேள்வி எழுப்பிய மதுசூதனன், “தேர்தலுக்கு பிறகு இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
ஆர்.கே. நகர்த் தேர்தலை ஒட்டி பால்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். வேட்பாளர்களின் மக்கள் செல்வாக்கு ஒருபுறம், வேட்பாளர்களின் சொல் வாக்கு மறுபுறம் என பரபரப்பாகக் போய்க்கொண்டிருக்கின்றது ஆர்.கே.நகர் தேர்தல் களம்.
எப்படியோ, வேட்பாளர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதோடு நின்றுவிடாமல் உண்மையாகவே தங்கள் பிரச்னைகளைத் தீர்தது வைக்கவேண்டும் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் விரும்புகின்றனர்.
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா என்பதை அந்தத் தொகுதி மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.