என் காதலே...- அனுஷ்காவுக்கு கோலியின் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா மட்டுமல்ல உலகத்தையே தங்கள் காதல் திருமணத்தால் திரும்பி பார்க்க வைத்த ஜோடி, விருஷ்கா தம்பதியினர்.
‘இதுவல்லவோ காதல்’ என ஊரே வியக்கும் வகையில் தாங்கள் சார்ந்த துறையிலும் சரி, தங்களது சொந்த வாழ்க்கையிலும் சரி, யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காது சாதனை மேல் சாதனை படைத்து ஜொலித்து வருகின்றனர் இந்தத் தம்பதியினர்.
விராட் கோலியின் சாதனையை மனைவி அனுஷ்கா சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்வதும் அனுஷ்காவின் சாதனையையும் அவரது பெருமையையும் கோலி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவின் 30-வது பிறந்தநாள் இன்று அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தன் காதல் மனைவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு ஸ்பெஷல் வாழ்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது வாழ்த்திப் பதிவில் கோலி, “என் பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே. என் வாழ்வில் நான் கண்ட பாஸிட்டிவான நபரும் நீதான். நேர்மையானவளும் நீதான். லவ் யூ..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துப் பதிவு விருஷ்கா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com