அகத்திக்கீரைnbspபொரியல்.. இது உடலுக்கு ரொம்ப நல்லது..

கீரை வகைகள் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. அவற்றில் அகத்திக்கீரை உடலில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. இப்போது, அகத்திக்கீரை பொரியல் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு மிளகாய் வத்தல் - 4 தேங்காய் துருவல் - ½ கப் வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 2 உப்பு, சமையல் எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெயை காய விட வேண்டும். பின்னர் அதில் கீரையை போட்டு நன்றாக வதக்கவும். 

கீரை நன்றாக வதங்கிய பின்னர், மிளகாய் வத்தலை அதில் கிள்ளிப் போட வேண்டும். வெங்காயம், மிளகாயை அரிந்து போட்டு, மேலும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து, தேங்காய் துருவலையும் போட்டு நன்றாக கிளற வேண்டும்.

மீண்டும் ஒரு முறை வதங்கிய பின்பு, சரியான பக்குவத்தில் வந்தவுடன் எடுத்து விடலாம். இப்போது அகத்திக் கீரை பொரியல் தயார் ஆகிவிடும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>