இரண்டு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி- உற்சாகத்தில் இந்திய முதலீட்டாளர்கள்

நிதியாண்டின் முதல் நாளிலேயே வீழ்ச்சியில் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை இன்று இரண்டு ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

உலகச் சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம் எனப் பல காரணிகளாலும் இந்தியப் பங்குச்சந்தை நிதியாண்டின் தொடக்க நாளில் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

2017-18 நிதியாண்டின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 205 புள்ளிகள் சரிந்து 32,968 புள்ளிகளாகி நின்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் 62 புள்ளிகள் சரிந்து 10,121 புள்ளிகளாக நிறைவடைந்தது. 

ஆனால், இந்த ஒரு மாத காலத்தில் படிப்படியாக உயர்ந்த வர்த்தகம் இன்று வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு வகை வர்த்தகக் குறியீடுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.66 புள்ளிகள் உயர்ந்து 35,160 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.05 உயர்ந்து 10,739 புள்ளிகளாகவும் நின்றது.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சர்வதேச நாடுகளுக்கு நிகராக இந்தியா வளர்ந்திருப்பதுதான் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணம் என இந்திய வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>