காத்து வரலே...- விமானக் கதவைத் திறந்த சீனப் பயணி!

விமானத்தினுள் காற்று வரவில்லை என விமானத்தின் கதவைத் திறந்த சீனப் பயணியின் கதை தற்போது சர்வதேச வைரல் செய்தியாகி வருகிறது.

சீனாவின் சின்சுவான் செங்க் பகுதியில் உள்ள மியான்யாங் நானிஜா விமான நிலையத்தில் சமீபத்தில் பயனி ஒருவர் செய்த வேடிக்கை செயலால் பெரும் விபரீதம் ஏற்பட இருந்தது. சீனாவின் சென் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் விமானத்தில் பயணிக்கத் தயாரானார்.

விமானம் கிளம்பும் நேரத்தில் விமானத்தின் உள்ளே தனக்கு காற்று வரவில்லை என்றும் வெட்கைத் தாங்க முடியாமலும் விமானத்தின் முக்கிய நுழைவுவாயில் கதவை அவராகவே திறந்துவிட்டார்.

அபாய ஒலி ஏற்பட்டதை அடுத்து விமானத்தின் ‘எமெர்ஜென்ஸி’ கதவு தானே திறந்து கொண்டது. விமான ஊழியர்களின் கவனத்தை மீறி நடந்த இந்த செயலால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

ஆனால், விமானம் கிளம்பாததால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தப் பயணியின் செயலை எண்ணி வேடிக்கை மனிதன் என விடுவதா, இல்லை நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு உலைவைத்தவல் என அடித்து துவைப்பதா என சக பயணிகள் நொந்துகொண்டு வெளியிட்டு வரும் சமூக வலைதளப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>