சிம்புவின் அடுத்த மூவ்: கன்னட படத்தில் பாடகராக அறிமுகமாகிறார்
By Isaivaani
தமிழக சினிமாவில் நாயகனாக வலம் வரும் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவருடைய நண்பர் சந்தானம் நடிப்பில் வெளியான சக்கபோடு போடு ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இதையடுத்து, ஓவியா நடிக்கும் 90 எம்.எல். என்ற படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதுதவிர ‘லவ் ஆன்தம்’ என்ற இசை ஆல்பம் மிகப்பெரிய ஆளவில் ஹிட் ஆனது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சரத்திரமாக அறிமுகமாகி, பாடலாசிரியராகவும், பாடகராகவும், இயக்குனர், இசையமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை நிருபித்து உள்ளார்.
தற்போது ’இருவுதெல்லவா பிட்டு' என்ற கன்னட சினிமாவில் பாடகராக அறிமுகமாகிறார்.
காவிரிபிரச்சினையில் கர்நாடகா மக்களிடையே சிம்பு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதன் முலம் சமூக வலைதளத்தில் தமிழக, கன்னட மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com