நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்தது..!

பாலக் கீரை சாப்பிடுவதால் நீரிழிவு நோயாளிகள் முதல் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இவைக்குறித்து மேற்கொண்டு பார்ப்போம் .

பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.

இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.

இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>