திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ( மே 2) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததால்ர. அப்போது, காய்ச்சிய பாலை பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, பொ. ஜெயராமன், இணை ஆணையர்கள் எம். அன்புமணி, எஸ். ஞானசேகரன், கோவில் தக்கார் ஆர். அருள் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.