பாகிஸ்தானில் 17 வயது டிக் டாக் பிரபலத்துக்கு நடந்த கொடுமை... நள்ளிரவில் நடந்த சம்பவம்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் சானா யூசப் (வயது 17)டிக் டாக் பிரபலமான இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 40 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். நேற்றிரவு ஒருவர் சானாவை சந்திப்பதற்காக வீட்டுக்குள் வந்துள்ளார். பின்னர், அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சானா இறந்து போனார். பின்னர், அந்த நபர் தப்பி ஓடி விட்டார். தற்போது, அவரது உடல் பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பல் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் சானாவுக்குள்ள புகழை கண்டு பொறாமையால், அந்த நபர் சானாவை சுட்டு கொன்றிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.