ரஜினிதான் அடுத்த முதல்வரா? - கமல்ஹாசன் சகோதரர் சூசகம்
கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று கமல்ஹாசன் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியும் உடல்நலக் குறைவால் பொது நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். முன்னதாகவே, நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், கட்சி பின்னர் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்தவர்தான் வருவார். இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம். உங்களை இந்த ஆண்டு நான் புரிந்து கொள்வேன். என்னை அடுத்த வருடம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com