வெளியானது காலா திரைப்படத்தின் செம்ம வெயிட் பாடல்!
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ‘காலா’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘செம்ம வெயிட்’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வந்த `கபாலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் தனுஷின் `உண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் ரஜினி - இரஞ்சித் கூட்டணியில் காலா திரைப்படம் தயாரானது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
‘காலா’ இந்த மாதம் 27-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் காரணமாக `காலா’-வின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இதையடுத்து, `காலா ஜூன் 7-ம் தேதி அனைத்து மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியாகும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, `மே 9-ம் தேதி காலா திரைப்படத்தின் இசை வெளியிடப்படும்’ என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் ரஜினியின் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு முதல் பாடல் ரிலீஸாகும் என தனுஷ் அறிவித்தார். அதன்படி மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செம்ம வெயிட் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
’செம்ம வெயிட்’ பாடல் இங்கே:
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com