2018 பஸ் எரிப்பு வழக்கு விசாரணை நெல்லையில் ராக்கெட் ராஜா உட்பட 4 பேர் ஆஜர்

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்குத் தாழையூத்துக்கு சென்ற அரசு பேருந்தை ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் சிலர் வழிமறித்து, பயணிகளை இறக்கிவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். நெல்லை பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கா, ராக்கெட் ராஜா மற்றும் அவருடன் தொடர்புடைய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

More News >>