ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து கோடியை தாண்டியதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தியது. இதுதொடர்பான வசூல் விவரத்தை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி நிலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்க சாதனை. பொருளாதார நடவடிக்கை தீவிரம் அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. பொருளாதார சூழ்நிலையுடன் இதுவே ரசீது அமல் காரணமாகவும் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து திருப்திகரமாக அமையும் என்று தோன்றுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.89 ஆயிரத்து 264 கோடியாக இருந்தது. 2017-2018ம் நிதியாண்டிலேயே மொத்தமாக ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் கோடி தான் வசூலானது. ஆனால், ஒரே மாதத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 485 கோடி வசூலானது இதுவே முதல் முறை.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com